டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி டீம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்காக வெண்கலப் பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் இந்திய ஆண்கள் ஹாக்கி டீமிற்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். கூடவே மாநில மற்றும் மத்திய அரசு அவர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் கேரளாவில் இருந்து இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்ஷின் வீட்டிற்கு நடிகர் மம்முட்டி நேரில்சென்று வாழ்த்தியுள்ளார். மேலும் 41 ஆண்டுகால இந்திய கனவை நிறைவேற்றியுள்ளதாகவும் பாராட்டுத் தெரிவித்தார். இதையடுத்து மம்முட்டி ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷை நேரில் சந்தித்தப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.