இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நயாகரா நீர்வீழ்ச்சியில் மூவர்ணக் கொடி ஒளி காட்சிப்படுத்தப்பட்டது.
இயற்கை அதிசயங்களில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் இரவு நேரங்களில் ஒளிக்காட்சி உண்டு. அருவியின் மீது வண்ண விளக்குகளால் ஒளி பாய்ச்சப்பட்டு, வண்ண வண்ண அருவி போன்று காட்சியளிக்கும். அதற்கு ஏற்றது போன்று இசையும் இசைக்கப்படும். குளிர்காலம், கோடைகாலம் மற்றும் இலையுதிர் காலம் என ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றவாறு இந்த ஒளிக் காட்சியை நேரம் மாறுபடும். சிறப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட வண்ணங்களில் ஒளி காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று இரவு 10 மணிக்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்தில் ஒளிக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கனடாவில் இருக்கின்ற இந்திய தூதரகம் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு டொராண்டோ நகரின் பல்வேறு இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து இந்திய வம்சாவளியினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.