பிரபல நாட்டின் பிரதமர் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டவரின் மகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை நாட்டின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பிறகு நேற்று புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனா பதவியேற்றார். இவருக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன் பிறகு தினேஷ் குணாவர்தனா பிரதமர் ஆவதற்கு முன்பு கல்வித்துறை மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஆக இருந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் குணவர்தனாவின் தந்தையான் டான் பிலிப் ரூப சிங்க குணவர்தனா இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர் என்ற ஒரு புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 1901-ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி இலங்கையில் பிறந்த டான் பிலிப் ரூபசிங்க குணாவர்தனா உயர் கல்வியை முடிக்காமல் அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிப்பதற்காக சென்றார்.
அங்கு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து லண்டன் சென்றார். அங்கு சுதந்திர போராட்ட வீரரான ஜவஹர்லால் நேருவை சந்தித்து, ஏகாதிபத்திய அமைப்பான இந்திய லீக்கில் சேர்ந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டார். அப்போது உலகப் புகழ்பெற்ற தலைவர்களான மெக்சிகோவின் ஜோஸ் வாஸ்கோன்செலோஸ், கென்யாவை சேர்ந்த ஜோமோ கெனிட்டா, இந்திய நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணமேனன், ஜவர்கலால் நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட பலரை சந்திக்கும் வாய்ப்பு பிலிப் ரூப சிங்க குணவர்தனாவுக்கு கிடைத்தது. கடந்த 1942-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற பிலிப் ரூபசிங்க குணாவர்தனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் இந்தியாவில் கூட்டுறவு சங்கத்தை அமைப்பதற்கு புதிய உத்வேகத்தை கொடுத்ததுடன், புதிய முறையில் பல்நோக்கு கூட்டுறவு சங்க அமைப்பையும் நிறுவினார். இதனையடுத்து குருசாமி என்று அழைக்கப்பட்ட பிலிப் குணவர்த்தனா இந்தியாவில் குசுமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மூத்த மகன் இந்திகா இந்தியாவிலும், இளைய மகன் தினேஷ் குணவர்தனா இலங்கையிலும் பிறந்தார். கடந்த 1935-ம் ஆண்டு இடதுசாரி கட்சியான லங்கா சமாஜ் கட்சியை பிலிப் குணவர்தனா தொடங்கி இலங்கையில் முன்னேற்றத்திற்காக கடுமையாக பாடுபட்டார்.
கடந்த 1943-ம் ஆண்டு பிலிப் ரூபசிங்க குணாவர்தனா இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் 50-வது நினைவு தினத்தை கடந்த மார்ச் மாதம் நினைவு கூர்ந்த இலங்கை அரசு அவரின் பெயரை பொன் எழுத்துக்களால் எழுதி வைத்துள்ளது. மேலும் புகழ்பெற்ற தலைவரின் மகனான தினேஷ் குணாவர்தனா இலங்கை மக்களுக்கு கண்டிப்பாக நல்லது செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர் சிக்கலான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.