இந்தியா டி20 கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
T20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.. மேலும் ஒரு வீரராக டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.. விராட் கோலி விலகினால் அவருக்கு அடுத்த படியாக யார் கேப்டனாக யாரை பிசிசிஐ நியமிக்கும் என்று கேள்விக்குறியாகி இருந்தது..
அதேசமயம் விராட் கோலிக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் டி20 உலக கோப்பை முடிந்த பிறகு ரோகித் சர்மா இந்திய அணி கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது..
தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த உலக கோப்பையில் டி20 கேப்டனாக கோலி கடைசியாக விளையாடுவதால், கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக இந்திய அணி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.