இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்திய அணி முதலில் களமிறங்கி 265/10 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் ( 56 ), ஷ்ரேயஸ் ஐயர் ( 80 ) ஆகியோர் ரன்களை குவித்தனர். இதையடுத்து 16, 18, 20 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் டி20 தொடர் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பிசிசிஐ இந்த தொடருக்கான அணியில் இருந்து அக்சர் படேல், கே.எல்.ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர்களுக்கான மாற்று வீரர்களாக தீபக் ஹூடா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் T20 அணி :-
ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சஹார், ரவி பிஷ்னாய், ஷர்துல் தாக்கூர், யுஜ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், தீபக் ஹூடா, ருதுராஜ் கெய்க்வாட்.