இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுசில் சந்திராவின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற ராஜீவ் குமார் வரும் 15ஆம் தேதி பதவியேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இவரது காலத்தில்தான் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.