மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க, இந்திய நீச்சல் வீரர்களுக்கு ஒலிம்பிக் பதக்க மேடை இலக்குத் திட்டம், வருடாந்திர பயிற்சி மற்றும் போட்டித் திட்டத்தின்கீழ், இந்த ஆண்டு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய நீச்சல் வீரர்களான கெனிஷா குப்தா, சஜன் பிரகாஷ், மானா படேல் மற்றும் ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோருக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. சஜனுக்கு, ரூ.15.1 லட்சமும் , ஸ்ரீஹரி நடராஜ்-க்கு 22.02 லட்சமும் , மானா படேல் மற்றும் கெனிஷா குப்தாவிற்கு தலா ரூ.3.89 லட்சமும் பயிற்சி முகாமின் செலவுக்காக, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு நிதி உதவியாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.