Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இந்திய பங்குச்சந்தையை விட்டு வைக்காத கொரோனா…..!!

நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று முன்தினம் சிறப்பாகச் செயல்பட்டு வந்த பங்குச்சந்தை  மீண்டும்  சரிந்து வர்த்தகமாகியுள்ளது.

மத்தியஅரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிறகு இந்தியப் பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் அந்நாட்டின் வர்த்தகத்தைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. இது சீனா மட்டும் இல்லாமல் உலகளவிலும் உள்ள பங்குசந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து தான் இந்திய பங்குச்சந்தையான சென்செக்ஸ், நிஃப்டி தொடர்ந்து நான்கு நாள்கள் சரிவை கண்டு பின்னர்  நேற்று முன்தினம் சிறப்பாகச் செயல்பட்டது. இருந்தாலும்  தொலைத்தொடர்பு நிறுவன பங்குகளின் வர்த்தகம்  சரிவை கண்டதால் குறியீட்டு எண் சென்செக்ஸ் 41170.12 புள்ளிகளாகவும் , தேசியப் பங்குச்சந்தை நிஃப்டி 12080.85 புள்ளிகளாகவும் சரிந்து வர்த்தகமாகியது.

பங்குச்சந்தையில் சிறப்பாகச் செயல்பட்ட பங்குகள்

  • இண்டஸ் இண்ட் வங்கி
  • டாடா ஸ்டீல்
  • பாரத ஸ்டேட் வங்கி
  • ஜீ என்டர்டெய்ன்மென்ட்

பங்குச்சந்தையில் சரிவில் முடிந்த பங்குகள்

  • சிப்லா
  • டெக் மஹிந்திரா
  • ரிலையன்ஸ்
  • ஏசியன் பெயிண்ட்ஸ்

இதோடு 65 நிறுவன பங்குகள் 52 வாரம் கண்டிராத கடும் சரிவை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |