இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்று கொண்டிருக்கும் பேராசிரியர்களை பணியில் அமர்த்தலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்து இருக்கிறது. எனினும் யுஜிசி அதற்கு சில வழிமுறைகளையும் விதித்து இருக்கிறது. அந்த வகையில் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு பிஎட் படித்திருப்பது அவசியம் இல்லை மற்றும் நெட்தேர்வில் தேர்ச்சியாகி இருக்கவேண்டிய கட்டாயமில்லை என அறிவித்துள்ளது.
ஆனால் குறைந்தது 15 ஆண்டு அனுபவம் இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தங்களது பணித் துறையில் ஏதேனும் முக்கிய பங்களிப்பு செய்திருந்தாலும் இந்தியா முழுதும் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு கற்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம், தொழில்முனைவு, வணிகம், சமூக அறிவியல், ஊடகம், இலக்கியம், நுண்கலை, சிவில் சேவைகள், ஆயுதப்படை, சட்ட தொழில், பொது நிர்வாகம் போன்ற துறைகளில் ஏதேனும் பங்களிப்பு செய்திருக்கவேண்டும்.
அதுமட்டுமின்றி விருப்பமுள்ள ஆசிரியர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அவர்களது பங்களிப்பு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஒரு ஆண்டிற்குள் கண்டிப்பாக பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த ஆசிரியர்களின் சேவைகளை பொறுத்து 4 வருடங்கள் வரைக்கும் கூட பணி நீட்டிப்பு செய்யப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.