பாகிஸ்தானை சேர்ந்தவர் சுப்ரக் உசேன். அங்கு இயங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இவன் இந்தியாவில் நாசவேலைக்கு திட்டமிட்டு இருந்தார். இதற்காக தீவிரவாத அமைப்பினர் அவனுக்கு பண உதவியும் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் நுழைய முயன்ற சுப்ரன் உசேனை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்தநிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த அவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவன் ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்ரக் உசேன் இறந்தார்.