ஆந்திரப்பிரதேசம் மாநிலம் பீமாவரத்தில் விடுதலைப் போராட்டவீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார். இதையடுத்து பல அரசு திட்டங்களையும் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் முடிவில் பிரதமர் புறப்பட்டு சென்றார்.
அப்போது நடிகையும், ஆந்திரப்பிரதேசம் மந்திரியும் ஆன ரோஜா, பிரதமருடன் நின்று செல்பி எடுத்துக்கொண்டார். இந்நிலையில் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உடன் இருந்தார். அத்துடன் இந்நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவியும் பங்கேற்றார். இவருடனும் ரோஜா செல்பி எடுத்துள்ளார். ரோஜாவின் இந்த செல்பி புகைப்படமானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.