இந்திய-பூடான் எல்லை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.
பூடான் நாட்டில் உள்ள இந்திய-பூடான் எல்லை கொரோனா தொற்றின் காரணமா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இதனால் மீண்டும் இந்திய-பூடான் எல்லை திறக்கப்படும் என கடந்த 23-ஆம் தேதி அந்த நாட்டு அரசு அறிவித்தது. இந்நிலையில் சுற்றுலாத்துறைக்கான சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்கான நிலையான மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் இந்திய-பூடான் இடையிலான 4 சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டது.
ஆனால் இவைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டு இருக்கும் எனவும் இந்திய சுற்றுலாப் பயணிகள் தங்க விரும்பினால் அவர்கள் ஒரு நாளைக்கு 1200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும் வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் 200 அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து செல்லும் சுற்றுலா பயணிகள் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை கண்டிப்பாக வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.