இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 2-வது ஒரு நாள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் முதலில் இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இலங்கை அணி 173 ரன்கள் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து இந்திய அணிக்கு 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. இதில் தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய ஷவாலி ஷர்மா 71 ரன்களும், மந்தனா 94 ரன்களும் விக்கெட் இழப்பின்றி எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இதன் காரணமாக இந்திய பெண்கள் அணி புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி ரன்களை எடுத்து சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை தற்போது இந்திய அணி முறியடித்துள்ளது. மேலும் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 164 ரன்கள் எடுத்திருந்தது சாதனையாக இருந்த நிலையில், தற்போது புதிய சாதனை படைத்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.