அமெரிக்க அரசு இந்தியாவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேருக்கு விருது வழங்கி சிறப்பிக்க உள்ளது.
அமெரிக்காவில் ஜோ பைடன் புதிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார். இவரது நிர்வாகம் சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன்விருது என்ற பெயரில் ஒரு விருதை புதிதாக உருவாக்கியுள்ளது. இவ்வகையில் இந்த விருதை பெறுவதற்கு இந்தியாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர் தகவல் அறியும் உரிமை இயக்கத்தில் தேசிய பிரச்சாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டோனி பிளிங்கன் கூறியுள்ளார். அதன் பிறகுஅஞ்சலி பரத்வாஜ் டெல்லியில் சதார்க் நகரிக் சங் காதன் என்ற என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்.
மேலும் இக்குழு ஊழலை அம்பலப்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வெற்றிகரமாக வாதாடிய குழுவாகும். இந்நிலையில் இந்த விருது” நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் அவர்களுடைய குழுக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம்” என்று பெரும் மகிழ்ச்சி யுடன் தெரிவித்துள்ளார். பின்னர் இதனை அஞ்சலி பரத்வாஜ் ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் .