கடந்த வருடமே இந்திய பொருளாதாரமானது மந்தநிலையில் சிக்கி விட்டது என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது “இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் சிக்கிக்கொள்ளும் என்ற கேள்விக்கே இடமில்லை என மத்திய நிதி மந்திரி கூறியதாக இன்று ஊடக செய்திகள் கூறுகிறது.
அவர் கூறுவது சரி தான். ஏனெனில் சென்ற ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்தநிலையை சந்தித்து விட்டது. இப்போது இந்திய பொருளாதாரமானது மந்த நிலையை நோக்கி செல்வது குறித்த கேள்வி எழவே இல்லை ” என அவர் சாடியுள்ளார். சர்வதேச அளவிலான பிரச்னைகளால் பல்வேறு நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டாலும், நமது நாட்டில் அது போன்ற நிலை ஏற்பட பூஜ்ஜிய சதவீதமே சாத்தியம் இருக்கிறது என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று மாநிலங்களவையில் பேசினார்.