அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 82.42 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய பங்கு சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் உக்ரைன் ரஷ்யா போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருகின்றது. இந்த நிலையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவிற்கு சென்று உள்ளார் நேற்று உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அதன் பின் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். அதிலும் குறிப்பாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவது பற்றி கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவராக நான் பார்க்கவில்லை அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வருவதாக பார்க்கின்றேன்.
வலுவடைந்து வரும் அமெரிக்கா டாலருக்கு எதிராக அனைத்து நாடுகளின் பணமும் செயல்பட்டு வருகிறது. அனைத்து நாட்டு பணத்தை ஒப்பிடும்போது அமெரிக்கா டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக இருக்கிறது வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் பணத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்திய ரூபாய் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் சிறப்பாக இருக்கிறது அன்னிய செலவாணி கையிருப்பும் சிறப்பாக இருக்கிறது இதனால் தான் பணவீக்கம் நிர்வகிக்கும் அளவில் தான் உள்ளது என நான் தொடர்ந்து கூறி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.