Categories
உலக செய்திகள்

“இந்திய பொருளாதாரம் மட்டுமல்ல உலக பொருளாதாரமும் சரிவை சந்திக்கும்”…? சர்வதேச நிதியம் கணிப்பு….!!!!!

அமெரிக்காவில் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு உலக பொருளாதார பார்வை பற்றிய தனது வருடாந்திர  அறிக்கையை சர்வதேச நிதியம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2021-2022) இந்திய பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டி (2022-2023) இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என சர்வதேச நிதியம் கணித்திருக்கின்றது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டுள்ள கணிப்பில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது தற்போது அதைவிட 0.6 சதவீதமாக குறைவாக கணித்திருக்கின்றது.

மேலும் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 8.2 சதவிகித வளர்ச்சி இருக்கும் என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும் அதனால் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதி எதிர்பார்த்ததைவிட பலவீனமாக இருக்கும் என தெரிகின்றது. மேலும் இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி உலக பொருளாதாரமும் சரிவை சந்திக்க நேரிடும் என சர்வதேச நிதியம் கணித்திருக்கின்றது. அதன்படி உலக பொருளாதார வளர்ச்சி ஆறு சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக குறையும் என தெரிவித்துள்ளது. கடந்த 2001 ஆம் வருடத்திற்கு பின் இதுதான் மிகவும் குறைவான வளர்ச்சியாகும்.

இந்த நிலையில் பொருளாதாரத்தில் முதல் மூன்று இடங்களில் உள்ள அமெரிக்கா ஐரோப்பிய கூட்டமைப்பு சீனா போன்றவற்றின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. உலகில் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் பொருளாதார சரிவை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதமாக குறையும் என்று தெரிகிறது சீனாவின் பொருளாதார வளர்ச்சி 8.1% இருந்து 3.2 சதவீதமாக குறையும் என சர்வதேச நிதியம் கணிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் சீனாவில் கொரோனா தொற்று முற்றிலும் போக வேண்டும் என்பதற்காக அடிக்கடி பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் வர்த்தகம் பலவீனமடைந்தது போன்றவை தான் இதற்கு காரணங்கள் என தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் போர் பணவீக்க உயர்வால் வாழ்க்கை செலவு அதிகரித்தால் சீனாவில் நிலவும் மந்த நிலை உலக நாடுகள் கடன் உதவிக்காக வட்டியை அதிகரித்தது போன்றவை பெரும் சவாலாக உருவெடுத்து உலக பொருளாதார மந்த நிலைக்கு காரணமாக அமைந்திருக்கிறது என சர்வதேச நிதியத்தின் பொருளாதார ஆலோசகர் பியரி ஆலிவியர் கொரிஞ்சாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |