இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி ஆவார். இவருடைய இயற்பெயர் பிரியதர்ஷினி ஆகும். இவர் இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு முக்கியமான பல சட்டங்களை அமுல்படுத்தினார். இவர் வங்கிகளை தேசிய மயமாக்குதல், மன்னர்களுக்கு வழங்கப்படும் மானிய முறையை ஒழித்தல், நில சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப் படுத்துதல், இந்தியாவில் வெற்றிகரமாக அணு ஆயுத சோதனையை நடத்தி அணு ஆயுத நாடாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை பிரகடனப்படுத்தினார்.
அதன்பிறகு வங்கதேசத்திற்கு விடுதலை பெற்றுக் கொடுத்தது, பசுமைப் புரட்சியின் மூலமாக உணவு உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படுத்தியது போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். இவருடைய ஆட்சி காலத்தில் அவசர நிலை பிரகடனம் என்பது ஒரு கரும்புள்ளியாக பார்க்கப்பட்டது. கடந்த 1984-ஆம் ஆண்டு இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாதத்தை ஒழித்தார். மேலும் இந்திரா காந்தி இந்தியாவின் இரும்பு பெண்மணி மற்றும் பெண்களின் துர்க்கை என அழைக்கப்பட்டார். இவர் 1984-0ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.