Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி…. கொரோனாவுக்கு மருந்து…. ஐ.சி.எம் ஆர் பரிந்துரை …!!

கொரோனா சிகிச்சைக்கு LTOLIZUMAB மருந்தை பயன்படுத்தலாம் என்று ஐ.சி.எம் ஆர் பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா தொற்று வைரஸால் இந்திய நாடு அல்லல் பட்டுக் கொண்டிருக்கும், இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மக்களை மீட்டு எடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டறியும் ஆய்வில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் மருத்துவர்களும் உள்ளனர்.  எப்போது கொரோனா தடுப்புமருந்து கிடைக்கும் என்ற கேள்வி குறித்தெல்லாம் பல்வேறு யூகங்களே பதிலாக வந்து கொண்டு இருக்கும் நிலையில் ICMR பல மருந்துக்களை கொரோனா சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில்தான் இந்திய நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் கொரோனா சிகிச்சைக்கு LTOLIZUMAB மருந்தை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் இதுவரை பல்வேறு மருந்துகள் கொரோனா சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு அவசரத் தேவைக்கு மட்டும் ltolizumab மருந்தை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |