Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்களே… தேசம் காக்க, நேசம் வளர்ப்போம்… வாருங்கள்…!!!

நம் நாட்டில் ஜாதி மதம் என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல் ஒன்றாக இருந்த தேசம் காப்பதற்க்கு நேசம் வளர்ப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.

இந்தியர்களாக, தமிழர்களாக காட்டிக் கொள்ளும் நாம், உள்ளுக்குள் ஜாதிகளாகவும் மதங்களாகவும் வர்க்கங்களாகவும் பிளவுபட்டிருக்கிறோம். நமது சொந்த முன்னேற்றமும் தேச நலமும் பாதிக்க இதுவும் காரணம். இந்த நிலையைப் போக்க ஒரே வழி சக மனிதர்களுடன் நேசத்துடன் வாழ்வது தான். ஒவ்வொருவரின் நம்பிக்கையும் கருத்துக்களும் மதிக்கப்பட வேண்டும். தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் வேறுபாடுகளுக்கும் அப்பால் நம்மை பிணைப்பது நம்பிக்கையையும் நேசமும் தான்.

இதை குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் வளர்த்தெடுக்க. அதனால் குழந்தைகள் நன்றாக வளர்ப்பது பெற்றோர்களின் கையில்தான் உள்ளது. தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே நல்ல விஷயங்களை மட்டும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். தற்போதுள்ள சமூகத்தினரும் தங்கள் மன நிலையை மாற்றிக் கொண்டு அனைவரிடமும் எந்த பாகுபாடும் இல்லாமல் பழகுவது தேசம் அமைதியாக இருக்க உதவும்.

Categories

Tech |