நாடு முழுவதும் கொரோனா பரவ தொடங்கிய கடந்த நான்கு மாதங்களாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும், வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற பல்வேறு உத்தரவுகளை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
இதனையடுத்து பலரும் பல்வேறு வகையான முகக் கவசங்களை பயன்படுத்தி வந்தனர். அந்த வகையில் தற்போது வால்வ் வைத்த N95 முகக்கவசத்தை மக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாநில அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் N95 முகக்கவசம் மூலம் கொரோனவை தடுக்க முடியாது என்றும், பருத்தி துணி மாஸ்க்கை பயன்படுத்த வலியுறுத்தியுள்ளது.