இந்திய மாணவர்கள் உயர்படிப்பிற்காக அமெரிக்கா செல்வதையே விரும்புகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலிருந்து வருடங்கள் தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது கல்லூரிப் படிப்பை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். அப்படி செல்லும் மாணவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா செல்வதையே விரும்புகின்றனர் என்று ஓபன் டோர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவில் படித்து வரும் சுமார் 10 லட்சம் இந்திய மாணவர்களில் 20% இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களே ஆவர். கடந்த பத்து வருடங்களில் மட்டும் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கும் எண்ணிக்கை இரட்டிப்படைந்துள்ளது.
இந்நிலையில் இவ்வாறு மேல்படிப்பை தொடர அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்கு வழிகாட்ட டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, பெங்களூர், அகமதாபாத் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் ஆலோசனை மையங்களை அமெரிக்கா அமைத்துள்ளது. இதன்மூலம் மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அங்குள்ள ஆலோசகர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தங்களுடைய ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் சாதனங்களில் EducationUSA India என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்