90 ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் உயர்கல்வி படிக்க தங்கள் நாட்டிற்கு வருவதாக வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டில் உயர்கல்விக்காக சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று அந்நாட்டின் வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் ஆணையர் டாக்டர் மோனிகா தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் உள்ள உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து சென்னையிலுள்ள நுங்கம்பாக்கத்தில் வைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது “எங்கள் நாட்டில் 90 ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலம் என்பதால் உயர்கல்வி சேருவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில், இப்போது அதிக அளவிலான இந்திய மாணவர்கள் எங்கள் நாட்டில் உயர்கல்வி சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் உயர்கல்விக்காக சேர வரும் மாணவர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என கூறியுள்ளார்.