உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் அவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரியும், பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை சுட்டிக் காட்டிய அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.