தன் இந்திய மாமியாருடன் சேர்ந்து ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், வயல்வெளியில் வெங்காயம் நடும் விடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த அப்பெண், ஒரு இந்தியரை திருமணம் செய்துகொண்டு இந்தியாவில் வசித்து வருகிறார். வீடியோவில் நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டு, வயல்வெளியில் தன் மாமியார் உடன் இணைந்து அப்பெண் வெங்காயம் புதைத்துக்கொண்டிருக்கிறார். இதனிடையில் வீடியோவை எடுக்கும் அப்பெண்ணின் கணவர், உன்னை ஒன்று கேட்கலாமா..? என்கிறார்.
View this post on Instagram
அதற்கு அந்த பெண்ணும் முகம் மலர்ந்தபடி சரிஎன்று கூறுகிறார். அதன்பின் நீ எங்கிருந்து வருகிறாய்..?, தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறாய்..? என் கணவர் கேட்க, அதற்கு அப்பெண் தான் ஜெர்மனியிலிருந்து வருகிறேன். இப்போது மாமியாருடன் சேர்ந்து வெங்காயத்தை நடவுசெய்து கொண்டிருக்கிறேன் என்கிறார். அத்துடன் அந்த விடியோவில் மிக எளிமையான வாழ்க்கையில் தன் குடும்பத்துடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது எனவும் அவர் பகிர்ந்துள்ளார். இதனால் பலரும் இந்த தம்பதியினருக்கு தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.