Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்திற்கு நவீன ஆயுதங்கள்… அமெரிக்காவிடம் வாங்க ஒப்புதல்…!!!

இந்திய ராணுவத்திற்கு அமெரிக்காவிடம் இருந்து ரூ.2, 290 கோடியில் நவீன ஆயுதங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அமெரிக்காவிடமிருந்து ரூ.2, 290கோடி செலவில் முப்படைகளுக்கும் நவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்காக ஒப்புதல் வழங்கப்பட்டது. அவ்வகையில் இந்திய கடற்படை மற்றும் விமானப் படையினருக்கு ரூ. 970 கோடி மதிப்பில் இலங்கையை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய ஆயுதங்கள் வாங்குவதற்கும், ராணுவத்தினருக்கு ரூ.780,00,72,000 சிக்ஸ் ஆயர் தானியங்கி துப்பாக்கிகளை வாங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி ரூ. 540 கோடி மதிப்பிலான எச்.எப். டான்ஸ் ரிசிவர் கருவிகள் வாங்குவதற்கு முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கிழக்கு லடாக் பகுதியில் எல்லைப் பிரச்சனை காரணமாக சீனாவின் அச்சுறுத்தல் மிகத் தீவிரமாக இருக்கும் நிலையில், ராணுவத்திற்கு நவீன ஆயுதங்கள் வாங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Categories

Tech |