ராணுவ வீரர்களுக்காக குண்டு துளைக்காத கார் வாங்கித் தர இயலாத பிரதமருக்கு சொகுசு விமானம் தேவையா? என்று ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் இன்று ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு ஆயத்தமாக வாகனங்களில் செல்லும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “ராணுவ வீரர்களுக்காக குண்டுதுளைக்காத டிரக்குகள், வாங்கி தர இயலாமல், பிரதமருக்கு 8 ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் மதிப்பில் நவீன விமானம் வாங்கி இருப்பது நியாயமா?”என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.