Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்”…. அக்15-ஆம் தேதியே கடைசி நாள்….. மாவட்ட ஆட்சியர் தகவல்….!!!!!!

இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2023 ஆம் பருவத்தில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. இத்தேர்வானது சென்னையிலும் நடைபெற இருக்கின்றது. இந்தத் தேர்வு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

அதன்படி எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே நேர்முக தேர்வில் கலந்து கொள்ள முடியும். இத்தேர்விற்கான விண்ணப்பத்தை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை – 600 003 என்ற முகவரிக்கு அக்டோபர் 15ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |