Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இந்திய ராணுவ கல்லூரி… 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம்… கலெக்டர் அறிவிப்பு…!!!

இந்திய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் வருகின்ற ஜனவரி மாதம் தொடங்கும் எட்டாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தகுதித்தேர்வு வருகின்ற ஜூன் மாதம் நான்காம் தேதி நடைபெற உள்ளது. ஜனவரி 2, 2010 -க்கும் ஜூலை 1, 2011 இடைப்பட்ட காலத்தில் பிறந்த மாணவ-மாணவிகள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

மேலும் இதற்கு ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டு இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். விவரக்கையேடு, முந்தைய வருடங்களில் நடைபெற்ற தேர்வுகளின் கேள்வித்தாள்களை கட்டணம் செலுத்தி எழுத்து மூலமாக அல்லது இணைய வழியில் www.rimc.gov.in மூலம் விண்ணப்பம் செய்து பெறலாம். பொதுப்பிரிவினருக்கு விரைவு தபால் ரூ 600, sc,st பிரிவினருக்கு ரூ 555 வரைவோலையாக எடுக்க வேண்டும்.

மேலும் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் உள்ள விண்ணப்ப படிவம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நகலெடுத்த விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. டேராடூனிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை நிரப்பி “தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்” தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை -600003 என்ற முகவரிக்கு வருகின்ற 25ஆம் தேதிக்குள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும். இந்தத் தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டுமே விடை அளிக்க முடியும். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |