Categories
தேசிய செய்திகள்

“இந்திய ராணுவ தலைமை தளபதிகள்”…. நாளை முதல் உச்சி மாநாடு தொடக்கம்… வெளியான முக்கிய தகவல்…..!!!!!

இந்தியாவில் ராணுவ தலைமை தளபதிகளின் உச்சி  மாநாடு வருடத்திற்கு 2 முறை நடைபெறும். இந்த மாநாட்டின் போது இந்திய ராணுவத்திற்கான முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பது குறித்து விவாதிக்கப்படும். அதன் பிறகு நடபாண்டின் 2-வது உச்சி மாநாடு நவம்பர் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து ராணுவ தலைமை தளபதிகள், இதர உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியின் போது ராணுவத்தின் மூத்த தலைவர்கள் ராணுவ விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகம் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் கலந்து உரையாடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது வளர்ந்து வரும் ராணுவத்தின் அம்சங்கள் மற்றும் கொள்கைகள் போன்றவைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமாம்.

அதோடு புதிய மனிதவள மேம்பாடு கொள்கையின் அமலாக்கம், முற்போக்கு ராணுவ பயிற்சியின் எதிர்கால சவால்கள், தற்சார்பு இந்தியாவில் ஊக்குவிப்பது தொடர்பான மாற்றங்கள், இந்திய ராணுவத்தின் மேம்பட்ட செயல்பாட்டுக்குத் திறனுக்கான திட்டம், திறன் மேம்பாடு, நவீனமயமாக்கவனலில் முன்னேற்றம், எதிர்கால‌ ஆயத்தப் படைக்கான தேவைகள் போன்றவைகள் குறித்து‌ ஆலோசிக்கப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்தியா சீனா உறவுகள் மற்றும் தொழில்நுட்பம் குறித்தும் சிறப்பு கருத்தரங்குகள் நடைபெற இருக்கிறது. மேலும் நவம்பர் 10-ஆம் தேதி மாநாட்டில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் கலந்து கொண்டு ராணுவ அதிகாரிகளுடன் முக்கியமான விஷயங்கள் குறித்து கலந்தாய்வு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |