இந்தியாவின் ரூபாய் மதிப்பானது வெளிநாட்டு கரன்சியுடன் ஒப்பிடுகையில் நன்றாக இருப்பதாக மத்திய நிதி மந்திரி கூறியுள்ளார். அதாவது ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 80 ரூபாயை தாண்டியுள்ளது. இது வரலாறு காணாத வீழ்ச்சி என்று கூறப்படுகிறது. ஒரு டாலருக்கு 39 காசுகள் சரிந்து முதல் முறையாக 81-ஐ தாண்டி 81.27 ஆக இருக்கிறது. அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் பெஞ்ச் மார்க் வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது. இதனால்தான் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது.
இந்த இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு அதிகமாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது, இந்திய ரூபாய் மதிப்பை மற்ற நாணயங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது ஏற்ற இறக்கம் அடையாமல் இருந்தது. மற்ற கரன்சிகளை விட அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு நன்றாகத்தான் இருக்கிறது. இதை ரிசர்வ் வங்கியும் மத்திய நிதி அமைச்சகமும் நன்றாக கவனித்து வருகிறது என்று கூறியுள்ளார்.