இந்திய வம்சாவளியினர் அனைவரும் தனக்கே தங்கள் வாக்குகளை வழங்குவார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. அந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் போட்டியிடுகின்றார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இரு தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” இந்திய பிரதமர் மோடி தனக்கு நல்ல நண்பர். இந்திய வம்சாவழியினர் அனைவரும் தனக்கே வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். அதே சமயத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஹவ்டி மோடி நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து அவர் பேசியுள்ளார்.