அமெரிக்க அதிபர் ஜோபைடன், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள் தான் நாட்டை சிறப்பாக வழிநடத்துவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற 45 நாட்களில் இந்திய வம்சாவளியினர் சுமார் 55 பேரை உயர்பதவிகளில் நியமித்திருக்கிறார். மேலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இந்த விண்கலத்தை செலுத்த வழிநடத்திய குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுவாதி மோகன் என்பவர் தான் செயல்பட்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்ட விண்கலம் குறித்து நாசா சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன் பேசுகையில், “இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள் தான் உயர்பதவிகளில் பணியாற்றி நாட்டை வழி நடத்துகிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார். மேலும் சுவாதி மோகன், துணை அதிபரான கமலா ஹாரிஸ் போன்ற அனைவருமே சிறப்பாக பணியாற்றுவதாக கூறியுள்ளார்.