இந்திய வம்சாவளி நடன கலைஞர் ராஜீவ் குப்தா இங்கிலாந்தின் உயரிய விருதான பிரதமர் விருதை பெற்று பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் என்ற நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நடன கலைஞர் ராஜீவ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். அவர் சென்ற 15 வருடங்களுக்கும் மேலாக நடனப் பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறார். அதன் மூலமாக இந்தியாவின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றாக இருக்கின்ற பாங்க்ரா நடனத்தை கற்றுக் கொடுத்து வருகின்றார்.இந்நிலையில் கொரோனா காரணமாக இங்கிலாந்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் ராஜுவ் குப்தாவின் நடன பள்ளிக்கு பூட்டு போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாற்று வழியை தேடிய ராஜுவ் குப்தா பாங்க்ரா நடனப் பயிற்சி வீடியோக்களை ஆன்லைன் மூலமாக நேரலையில் ஒளிபரப்பி வருகின்றார்.
பாங்க்ரா நடனமானது, நடனமாக மட்டும் கருதப்படாமல் சிறந்த உடற்பயிற்சியாகவும் இருப்பதால் ராஜுவ் குப்தாவின் வீடியோக்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடப்பவர்கள் அனைவருக்கும் அவரின் வீடியோக்கள் பெரும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. இந்நிலையில் ராஜீவ் குப்தாவின் இந்த சேவையை பாராட்டும் வகையில் இங்கிலாந்தின் உயரிய விருதான பிரதமர் விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி ராஜுவ் குப்தா கூறும்போது, “இந்த விருதைப் பெறுவதற்கு நான் உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.என்னுடைய ஆன்லைன் நடன வகுப்புகள் இப்படி ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் ஒருபோதும் கருதவில்லை” என்று கூறியுள்ளார்.