ஆண் குழந்தை இல்லை என்பதால், கணவரால் குடும்ப வன்முறைக்கு ஆளாகிய சீக்கிய பெண் அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்டார். உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மந்தீப் கவுர் என்ற பெண் அமெரிக்காவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன் அவர் வெளியிட்ட வீடியோவில்,என் கணவர் தினமும் என்னை அடித்ததை என்னால் பொறுக்க முடியவில்லை. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது.
நான் இவ்வளவு நாட்களும் உயிரோடு இருந்ததற்கு காரணம் என்னுடைய மகள்கள். இனி என்னால் சித்திரவதை பொறுக்க முடியாது.என் மகள்களை யாராவது பார்த்துக் கொள்ளுங்கள் என்று வீடியோ பதிவிட்டு விட்டால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.மேலும் குற்றம் செய்த அவரது கணவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்பட்டு, உயிரிழந்த மன்தீப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என மன்தீப்பின் தங்கை வலியுறுத்தியுள்ளார்.