அந்நியர்கள் ஆட்சிக் காலத்து சதியின் ஒரு பகுதியாக எழுதப்பட்டது தான் இந்திய வரலாறாக தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது என்று PM மோடி வேதனை தெரிவித்துள்ளார். இதுபற்றி அசாமில் பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய வரலாறு இந்திய பார்வையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவின் வரலாறு அந்நியர்களுக்கு அடிமைப்பட்ட ஒரு நாடு என்பது கிடையாது. அவர்களை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட போர்களிலும் போர்களை முன் நின்று நடத்திய மாவீரர்களையும், அவர்களுடைய தியாகங்களையும் சொல்வதே நம்முடைய வரலாறு. ஏனெனில் அந்நிய ஆட்சியாளர்கள் இந்த மண்ணில் தொடர்ந்து எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு எதிராக நம் நாட்டின் ஏராளமான மாவீரர்கள் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்ந்து தோன்றிய வண்ணம் இருந்திருக்கிறார்கள். வீரத்துடன் போரிட்டு இருக்கிறார்கள். பலரும் தங்களுடைய உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள்.தன்னலம் கருதாது போரிட்ட அந்த மாவீரர்களின் தியாகங்களை போற்றக்கூடியதாக நம்முடைய வரலாறு இருந்திருக்க வேண்டும். ஆனால் இது வெளிப்படையாக மறைக்கப்பட்டு விட்டன. போர் வெற்றிகள். தியாகங்களின் வரலாறு ஆகியவைதான் இந்திய வரலாறு. இதற்கு ஏற்ப நாம் நமது வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று கூறினார்.