இந்திய வரலாற்றில் முதல்முறையாக 10 மாத குழந்தைக்கு இந்திய ரயில்வே பணி வழங்கியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர குமார் என்பவர் விலாப் பகுதியில் ரயில்வே ஊழியராக புரிந்து வந்தார். கடந்த வாரம் வாகன விபத்தில் இவரும் இவரது மனைவியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அவர்களின் 10 மாத குழந்தை ராதிகா யாதவ் மற்றும் உயிர் பிழைத்தது. இந்நிலையில் ரயில்வே விதிகளின் படி ராஜேந்திர குமாரின் குடும்பத்திற்கு ராய்ப்பூர் ரயில்வே கோட்டம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
தற்போது பாட்டியின் பராமரிப்பு வளர்ந்து வரும் அந்த 10 மாத குழந்தையான ராதிகா யாதவுக்கு தன் தந்தையின் பணி வழங்கப்பட்டுள்ளது. சிறிய குழந்தை என்பதால் அதன் கைரேகையை பதிவு செய்து பணி நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் 18 வயதை பூர்த்தி செய்ததும் சுய விருப்பத்தின் அடிப்படையில் பணிக்கு சேரலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.