Categories
உலக செய்திகள்

இந்திய விமானங்களுக்கு தடை… சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் மக்கள்… கிரிக்கெட் வீரர்களுக்கும் இதே நிலை…!!

இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்ததால் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றின் 2ஆம் அலை மற்ற நாடுகளை விட இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சமீபகாலத்தில் பிரித்தானியா, கனடா, சிங்கப்பூர், நியூசிலாந்து, ஹாங்காங், இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. இதனையடுத்து பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்தியா விமானங்களை 30%மாக குறைந்துள்ள நிலையில் தற்போது மே 15ஆம் தேதி வரை இந்திய விமானங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் வசிக்கும் ஆஸ்திரேலியா குடிமக்கள் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்டோரும் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்தியாவிற்கு உதவும் வகையில் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் வெண்டிலேட்டர் ஆகியவை அனுப்புகிறோம் என ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் கூறியுள்ளார்.

Categories

Tech |