இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதமாக இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மட்டும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் இந்தியாவில் இருந்து யாரும் வரக்கூடாது என தடை விதித்துள்ளது. இந்தியா கொரோனா இரண்டாவது அலையில் அதிக அளவு பாதிக்கப்பட்டு இருப்பதால், மற்ற நாடுகள் அஞ்சுகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமான நிலையில், இங்குள்ள தொழிலதிபர்கள், பிரபலங்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் தீவு தேசமான மாலத்தீவுக்கு படையெடுக்க தொடங்கினர். தற்போது மாலத்தீவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் இந்திய சுற்றுலா பயணிகள், விமானங்கள் மாலத்தீவு வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.