கடந்த 9-ம் தேதி அருணாச்சலப் பிரதேச எல்லையில் தவாங் செக்டார் பகுதியில் சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. அப்போது இந்திய – சீன படைகளுக்கு இடையேயான மோதலில் இரு தரப்பிலும் வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அதில் இந்திய தரப்பில் 15 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும் சீன தரப்பில் அதிக அளவிலான வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவலை நேற்று இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு பதில் அளித்து பேசிய அவர், நாட்டில் தற்போது பா.ஜ.க அரசு உள்ளது. அதனால் “எங்களுடைய அரசு இருக்கும் வரை நாட்டின் ஒரு இன்ச் நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது”. மேலும் அருணாச்சலப் பிரதேசத்தில் நம்முடைய இந்திய வீரர்கள் காட்டிய வீரத்தை நான் வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.