Categories
அரசியல்

“இந்திய வெளியுறவு கொள்கையின்” முக்கிய அம்சம் அணி சேராக்கொள்கை…. இதோ சில தகவல்கள்….!!!!

இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக அணிசேரா கொள்கை விளங்குகிறது. இதனுடைய நோக்கம் என்னவென்றால் ராணுவ கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேச சுதந்திரத்தை பராமரிப்பதே ஆகும். இந்தக் கொள்கையை 120 உறுப்பு நாடுகளையும் 15 நாடுகளுடைய பார்வையாளர்களையும், 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இந்த இயக்கம் அரசியல் இயக்கத்தில் இருந்து பொருளாதார இயக்கமாக மாற்றும் கொண்டுள்ளது. இந்தியாவில் நேரு, யுகோஸ்லாவின் டிட்டோ, எகிப்து நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ருமா ஆகியோர் இந்த இயக்கத்தின் நிறுவன தலைவர்களாவர்.

இந்தியா இந்த அணிசேரா கொள்கையில் இருந்த போதும் சோவியத் யூனியனோடு 1971 ஆம் வருடம் இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இணைந்தது. பின்பு இந்திய ராணுவ நவீனமயமாக்களை மேற்கொண்டது. 1964ஆம் வருடம் சீனா லாப்தார் என்ற இடத்தில் மேற்கொண்ட அணு சோதனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா தன்னுடைய முதல் பூமிக்கு அடியிலான அணு சோதனை திட்டத்தை 1976 ஆம் வருடம் பொக்ரேனில் நடத்தியது. பேரழிவை ஏற்படுத்திய இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இந்திய அரசியல் விடுதலை பெற்றது.

அதற்குப் பிறகு வறுமை, எழுத்தறிவின்மை, குழப்பமான சமூக பொருளாதார நிலைகளில் இருந்து இந்தியா தன்னை மீட்டெடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தது. இதனால் நமது புதிய நாடு ராணுவ கூட்டு மற்றும் ஒப்பந்தத்தில் ஈடுபட முடியவில்லை. ராணுவ கூட்டினை தவிர்ப்பது என்பது ஒரு விருப்பம் மட்டுமல்லாமல் ஒரு அவசியமாகவும் இருந்தது. அணிசேராமை என்பது பிரச்சனைகளுக்கு முடிவுகளை நாடுகளே சுதந்திரமாக தீர்மானிப்பதாகும்.

ராணுவ வலிமையில்லை என்று பொருள் இதற்கு கிடையாது. மோதல்கள் மற்றும் பதட்டங்களை குறைப்பதை உறுதி செய்வது என்பது பொருள். அணி சேரமை விட்டு விலகி இருந்தால் கூட இந்தியா அதிக அளவில் தனது ராணுவ அமைப்பை பலப்படுத்தவும் ஒரு அணுசக்தி நாடாகவும் ஆக முடிந்தது. வெளியுறவு கொள்கைகளை நிர்வாகம் செய்வதில் ஏற்படும் குறைகளும் அதில் ஏற்படும் தவறுகளும் சரி செய்யப்பட்டாலும் இந்தியாவினுடைய அடிப்படை கொள்கையான அணிசேராமை இயக்கம் இன்னும் நடைமுறையில் தான் உள்ளது.

Categories

Tech |