Categories
சினிமா

இந்தி திணிப்புக்கு எதிராக ஏ.ஆர்.ரகுமான்…. டுவிட்டரில் அதிரடி பதிவு….!!!

இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்ற கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் லேட்டஸ்ட் ட்விட்டர் பதிவு பேசுபொருளாகியுள்ளது. “இன்பத்தமிழ் எங்கள் உரிமை செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசன் பாடலை பதிவிட்டவர், இந்தித் திணிப்புக்கு எதிராக தன்னுடைய குரலை கொடுக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன்பு CAAஉள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுபோன்று நாசுக்காக தன்னுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |