இந்தி திரைப்பட காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், நான் இந்தி பேச மாட்டேன். உங்கள் வேலைக்கு தேவை என்றால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். இந்தி திணிப்பை நாங்களும் ஏற்கவில்லை. இந்தித் திணிப்பை தமிழ்நாடு பாஜக எதிர்த்துக் கொண்டுதான் உள்ளது. இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையில் காங்கிரஸ் கட்சி சார்பாக இந்தி திணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தி என்பது விருப்ப பாடமாக மட்டுமே உள்ளது. இந்தி மொழி திணிப்பை தமிழ்நாடு பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும். ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்தை வரவேற்கிறோம். அவர் சொன்னது போல தமிழ் இணைப்பு மொழியாக இருப்பது பெருமை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.