திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்தி திணிப்பு மற்றும் ஒரே நுழைவுத் தேர்வு முறையை திரும்ப பெற வலியுறுத்தி எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது..
திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தலைநகரங்களில் மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தற்போது ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு தொடர்ந்து இந்து திணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அதே போன்று மத்திய அரசு நடத்தக்கூடிய பொது நுழைவு தேர்வுகளில் ஹிந்தியை கட்டாயப்படுத்தக்கூடிய நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவதாக மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்து திணிப்பு நடவடிக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதே போன்று மத்திய அரசு நடத்தக்கூடிய ஐஐடி, ஐஐஎம் மத்திய பல்கலைக்கழகங்களை நடத்தக்கூடிய தேர்வுகளில் இந்தி மொழியை பயிற்சி மொழியாக படித்திருக்கக்கூடிய மாணவர்கள் மட்டுமே நுழைத்தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு திணிப்பதாகவும், இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் இந்து திணிப்பு செய்யக்கூடிய நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவதாக மத்திய அரசுக்கு எதிராகவும், இந்தி திணிப்பு நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலைந்து இருக்கக்கூடிய நிலையில் மாணவரணி செயலாளர் சி.வி எம்.பி எழிலரசன் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், பள்ளிக்கல்வி கல்லூரி மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தற்போது தொடங்கியுள்ள இந்த ஆர்ப்பாட்டம் ஒரு மணி நேரம் நடக்கும் என தெரிகிறது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..
🔴LIVE : மாநில இளைஞர் அணி செயலாளர் திரு.#உதயநிதி_ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இந்தி திணிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் … pic.twitter.com/VoMC5ct09h
— Vinodth Vj… (@VinodthVj) October 15, 2022