Categories
மாநில செய்திகள்

இந்தி திணிப்பை தொடர்ந்து சமஸ்கிருத திணிப்பு – வைகோ

பொதிகை தொலைக்காட்சியில் நாள்தோறும் 15 நிமிடங்கள் சமஸ்கிரத செய்தி அறிக்கை கொடுக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள கண்டன அறிக்கையில் “செத்துப்போன மொழிக்கு செய்தி அறிக்கை எதற்கு” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து துறைகளிலும் கட்டாயமாகக் இந்தியை திணித்து வரும் பாஜக அரசு அடுத்த கட்டமாக வழக்கொழிந்த சமஸ்கிருதத்தை உயிர்கொடுக்கும் முயற்சிகளைத் தொடங்கி இருப்பதாக கூறியுள்ளார். நாட்டில் 25,000 பேர் கூட பேசாத ஒரு மொழிக்கு அனைத்து மாநில வானொலிகள் தொலைக்காட்சிகள் செய்தி அறிக்கை வாசிக்க வேண்டும் என்ற உத்தரவை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.

இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் விடுத்துள்ள கண்டன பதிவில் சமஸ்கிருத செய்தி அறிக்கையை கேட்க 5 ஆள் கூட இல்லாத நிலையில் உதய் எதற்கு என்று ஆறுமுக சங்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |