இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என சிறுபான்மையினர் ஆணையம் மாநில தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சோனா கல்லூரியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக மாவட்ட அளவிலான மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆணையத்தின் மாநில தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை தாங்கிய நிலையில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி, வக்கீல் ராஜேந்திரன், எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இந்த பேச்சுப் போட்டிக்கு “தமிழர்களாக எழுவோம் தலை நிமிர்ந்து நிற்போம்” என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடந்த நிலையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளதாவது, இதுவரை 25 மாவட்டங்களில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சு போட்டி நடத்து முடித்துள்ள நிலையில் மீதமுள்ள மாவட்டங்களில் முடித்த பிறகு சென்னையில் இறுதிச்சுற்று நடைபெறும் என கூறினார். உள்துறை மந்திரி அமித்ஷா ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழி இருக்க வேண்டும் என கூறியதை பற்றி பேசினார். இந்தி பேசாத மாநிலங்களில் இருக்கின்ற மாணவர்களையும் இளைஞர்களையும் இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கடியதாக இருக்கின்றது. மாணவர்களுக்கிடையே கூடுதலாக ஒரு மொழியை படிக்க வேண்டிய கட்டாயத்தை இவர்கள் உண்டாக்குகிறார்கள். மேலும் இந்தி திணிப்பு பற்றி பேசினார்.
இதைத்தொடர்ந்து பாஜக கட்சியை வேண்டாம் என 65 சதவீத மக்கள் நினைக்கின்றதாகவும் 35 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். ஆதலால் 65 சதவீத மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி வருவதாகவும் அதையே ராகுல் காந்தியும் வலியுறுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், துணை மேயர் சாரதாதேவி, சோனா கல்லூரி குழும தலைவர் வள்ளியப்பா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.