இந்தி திரையுலகில் தனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது என்று ஏ ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகில் தனக்கு எதிராகஒரு கும்பல் செயற்படுவதாகவும் இந்தி திரைப்படங்களுக்கு தான் இசை அமைப்பதை தடுத்து வருவதாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அண்மையில் தற்கொலை செய்துக் கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்துள்ள தில் பேச்சறா படத்திற்கு இசை அமைப்பதற்காக அதன் இயக்குனர் முகேஷ் சப்ராவை தன்னை தொடர்பு கொண்ட போது தனக்கு எதிராக பலர் செயல்படுவதை குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
முகேஷ் சப்ரா உடனான சந்திப்புக்கு பின்னரே தனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல் செயல்படுவதை அறிந்து கொண்டதாக தெரிவித்தார் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர்கள் தன்னை தொடர்பு கொள்ள தயங்க தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். தில் பேச்சறா படத்திற்கு இரண்டு நாட்களில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.