Categories
மாநில செய்திகள்

இந்தி தெரிந்தவர்கள் இங்கு பானிபூரி தானே விற்கிறார்கள்…. அமைச்சர் பொன்முடி கேள்வி….!!!!!

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் மாநில சிறுபான்மை ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, பேச்சு, கலைப் போட்டிகளை அனைத்து கல்லூரிகளிலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பேச்சுப் போட்டியில் கலந்துகொள்பவர்கள் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், வரலாற்றை அறிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அனைவரும் விரும்பிய ஆசையை நிறைவேற்ற “நான் முதல்வன்” என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று நம் தமிழகத்தில் பேச்சு ஆற்றல், பாடம் எடுக்கும் திறனை வளர்த்தெடுத்துள்ளது திராவிட இயக்கம் என்று கூறினார். அத்துடன் ஸ்டாலின் ஏன் இந்தியை எதிர்க்கிறார் என்று கேட்கிறார்கள், இந்தி படித்தால் வேலை கிடைத்துவிடுமா..? என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார். இதற்கிடையில் இந்தி தெரிந்தவர்கள் தமிழகம் வந்து பானிபூரி விற்பனை செய்கிறார்கள்.

இந்தியை படிக்கக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. ஆகவே 3-வது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம் அதில் தவறில்லை. ஆனால் இந்தி திணிப்பைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம் எனவும் கூறினார். உக்ரைனுக்கு மருத்துவம் பயில மாணவர்கள் செல்வதற்கு காரணமே நீட் தேர்வு தான். இங்கு அதிகமான கட்டணம் என்பதால் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர். இந்நிலையில் உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பும் பொறியியல் மாணவர்கள் விருப்பப்பட்டால் இங்குள்ள கல்லூரிகளில் அவர்கள் படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

Categories

Tech |