கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மற்றும் இந்தி நடிகை சாரா அலிகான் இருவரும் டேட்டிங் செய்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சென்ற 2019 ஆம் வருடம் ஒரு நாள் போட்டியின் மூலம் அறிமுகமாகி அதில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுவரை அவர் 11 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கின்றார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் மகள் சாராவும் இவரும் காதலிப்பதாக இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் நான் இப்போதும் தனி ஆளாகத்தான் இருக்கின்றேன் என சுப்மன் கில் கிசு கிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் சுப்மன் இந்தி நடிகை சாரா அலிகானுடன் டேட்டிங் செய்த வீடியோ மற்றும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒரு ரசிகை சாரா அலி கானை உணவகத்தில் பார்த்ததால் வீடியோ எடுத்திருக்கின்றார். அந்த வீடியோவில் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் இருக்கின்றார். அதில் இருவரும் உணவு சாப்பிடுவது போல இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
Shubman Gill took the song seriously,
“Hey, que Sara Sara, jo bhi ho so ho
Hamein pyaar ka ho aasara, phir chaahe jo ho.” pic.twitter.com/F2LRrrXlsy— Amul Joshi (@amul_joshi) August 29, 2022