தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து இந்தி பற்றிப் பதிவிட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மத்திய அரசு இந்தி மொழியை நாடு முழுவதும் திணிக்க முயற்சி செய்து வருவது குறித்து கடுமையான எதிர்ப்பு குரல் ஆங்காங்கே எழுந்து வருகின்றது. இந்த நிலையில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. மருத்துவமனை சார்பாக கொடுக்கப்படும் அனைத்து ஆவணங்களும் இந்தி மொழியில் கையாளத் தொடங்கியுள்ளது.
இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றது. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கடைசியில் இந்தி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது வருந்துகின்றோம்.
மேலும் இந்தி படிப்போரை வெறுக்க மாட்டோம். ஆனால் திணிப்போரை ரசிக்கும் மாட்டோம். ஒருமைப்பாடு சிறுமைபடாதிருக்க நாட்டின் பன்மை கலாச்சாரம் பாதுகாக்கப்படவேண்டும். மேலும் சிலர் நுழைக்க பார்ப்பது ஊசியில் நூலன்று ஒட்டகம் நுழையாது என குறிப்பிட்டு கூறியுள்ளார்.